'படிக்காம ஏன் டிவி பாக்குற'..? கண்டித்த தாய்..! மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு..!

By Manikandan S R S  |  First Published Mar 2, 2020, 1:09 PM IST

சம்பவத்தன்று வீட்டில் ஷாலினி டி.வி பார்த்து கொண்டிருந்தார். அதை அவரது தாய் காஞ்சனா கண்டித்ததுடன் தேர்வு நெருங்கிவரும் வரும் நிலையில் படிக்காமல் அலட்சியமாக இருப்பதாக கூறி வருந்தியுள்ளார். அப்போது திடீரென காஞ்சனாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காஞ்சனா. இந்த தம்பதியினருக்கு ஷாலினி என்கிற மகள் இருக்கிறார். 15 வயது சிறுமியான இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலையப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். குமார் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் ஷாலினி டி.வி பார்த்து கொண்டிருந்தார். அதை அவரது தாய் காஞ்சனா கண்டித்ததுடன் தேர்வு நெருங்கிவரும் வரும் நிலையில் படிக்காமல் அலட்சியமாக இருப்பதாக கூறி வருந்தியுள்ளார். அப்போது திடீரென காஞ்சனாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

4ம் வகுப்பு மாணவியை காமவெறியுடன் சீரழித்த 8ம் வகுப்பு மாணவர்கள்..! பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த கொடூரம்..!

இதனிடையே தன்னால் தான் தாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக எண்ணி ஷாலினி மன உலைச்சல் அடைந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

click me!