அதிவேகத்தில் கண்டெய்னர் லாரியில் பயங்கரமாக மோதிய பைக்..! ரத்தவெள்ளத்தில் நண்பர்கள் துடிதுடித்து பலி..!

Published : Feb 21, 2020, 12:02 PM IST
அதிவேகத்தில் கண்டெய்னர் லாரியில் பயங்கரமாக மோதிய பைக்..! ரத்தவெள்ளத்தில் நண்பர்கள் துடிதுடித்து பலி..!

சுருக்கம்

அதிவேகத்தில் பின்னால் வந்த விஜய்யின் இருசக்கர வாகனம் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் விஜய் மற்றும் அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் அடுத்து இருக்கிறது அடிவாரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் விஜய்(19). இவரும் கடலாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (19) என்கிற வாலிபரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வளையாம்பட்டில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டிற்கு செல்ல இருவரும் முடிவெடுத்தனர். அதற்காக ஒரு இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர்கள் செங்கம் அடுத்த குயிலம் கூட்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தின் முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென லாரி ஓட்டுநர் சடன் பிரேக் போடு வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது அதிவேகத்தில் பின்னால் வந்த விஜய்யின் இருசக்கர வாகனம் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் விஜய் மற்றும் அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 

பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து காவலர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..! எங்கள் உயிர்மொழி..!

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?