ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பலி !! வரன் பார்க்க சென்ற நேரத்தில் நிகழ்ந்த கொடூரம் ..

Published : Aug 14, 2019, 11:36 AM ISTUpdated : Aug 14, 2019, 11:45 AM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும்  பலி !! வரன் பார்க்க சென்ற நேரத்தில் நிகழ்ந்த  கொடூரம் ..

சுருக்கம்

திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உடல் நசுங்கி பலியாயினர்.

பெங்களூர் கோரமங்களா நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் . இவரது  மனைவி சந்திரா இவருக்கு ஒரு மகள் , இரண்டு மகன்கள் .5 பேரும், பெண் பார்ப்பதற்காக காரில் திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்கள் செங்கம் அடுத்த அய்யம்பாளையம் அருகே வந்தபோது, காருக்கு முன்னே சென்ற வாகனத்தை முந்தியுள்ளனர்.

அப்போது எதிரே வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது . கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் மோதிக்கொண்டன . காரில் பயணம் செய்த 5  பெரும் உடல் நசுங்கி பலியாயினர் . அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண் பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த இந்தக் கோர விபத்து உறவினர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?