தவறான சிகிச்சை... பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!

Published : Aug 06, 2019, 04:57 PM IST
தவறான சிகிச்சை... பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!

சுருக்கம்

ஆரணியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரணியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கூரை சேர்ந்தவர் அரிவிழிவேந்தன். இவரது மனைவி ஜமுனா (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு பிரசவவலி ஏற்பட்டதையடுத்து குடும்பத்தினர் ஜமுனாவை மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதித்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. இதனால் அங்குள்ள செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜமுனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

ஜமுனாவிற்கு நச்சு குடல் வெளியே வரவில்லை. இதையடுத்து செவிலியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜமுனாவிற்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு ஜமுனாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜமுனா இறந்துவிட்டதாக கூறினர். குழந்தை பிறந்த சந்தோ‌ஷத்தில் இருந்த உறவினர்கள் தாய் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஜமுனாவின் சாவிற்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அளித்த தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?