தடுப்பூசி போடுங்க… தங்கத்தை அள்ளுங்க…. ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு அமோக வரவேற்பு…

By manimegalai aFirst Published Sep 26, 2021, 12:26 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா தடுப்பூசி திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா தடுப்பூசி திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மூண்றாவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில ஊர்களில் பரிசுப் பொருட்களாக வீட்டு உபயோக பொருட்கள், ரிசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 913 சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு தங்கக் காசு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் பெயர்களை சீட்டில் எழுதி,  குலுக்கல் முறையில் 6 பேருக்கு தலா 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தங்கக்காசு வெல்லும் ஆர்வத்தில் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். திருவள்ளூரில் இதுவரை 14 லட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தகுதியானவர்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 901 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

click me!