சாதி மறுப்பு காதல் திருமணம்.. பெற்ற மகன் ஆணவக் கொலை? கைக்குழந்தையுடன் உருண்டு புரண்டு கதறிய மனைவி..!

By vinoth kumar  |  First Published Sep 23, 2021, 9:55 AM IST

 சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதால் அவரின் குடும்பத்தினர், அவர்மீது கடும் கோபத்திலிருந்தனர். எனவே, என்னுடைய கணவரை அவரின் குடும்பத்தினர்தான் ஆணவக்கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எரித்துவிட்டனர். 


தாத்தா இறந்துவிட்டதாக வரவழைக்கப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரை உறவினர்கள் ஆணவ கொலை செய்திருக்கலாம் என்று காதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் (29). இவர், கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது ரயில் மூலம் சென்னைக்கு செல்லும்போது இவரும், சென்னையில் மொபைல் கடையில் பணிபுரிந்து வந்த, பெரியபாளையம் அருகே உள்ள காரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமன்(32) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. 

Tap to resize

Latest Videos

undefined

இதைத் தொடர்ந்து, கவுதமன் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை கடந்த 2019-ம் ஆண்டு சென்னை அடையாறில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டோம்.  இதனையடுத்து,  இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். பின்னர், கடந்த ஜனவரி முதல் ஆவூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அன்று கெளதமின் உறவினர் தாத்தா இறந்துவிட்டதாகக் கூறி அவரை அவருடைய பெற்றோர் காரணி கிராமத்துக்கு அழைத்தனர். அவரும், எங்களிடம் கூறிவிட்டு அங்கு சென்றார். ஆனால், அதன் பிறகு கௌதம் எங்களிடம் தொடர்புகொண்டு பேசக்கூட இல்லை. நான் தொடர்புகொண்டு பேச முயன்றும் முடியாமல் போனது.  இதனால் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அமுலின் சகோதரர் கடந்த 20-ம் தேதி காரணி கிராமத்துக்குச் சென்றபோது, அங்கு கவுதமன் உயிழந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஏற்கெனவே, சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதால் அவரின் குடும்பத்தினர், அவர்மீது கடும் கோபத்திலிருந்தனர். எனவே, என்னுடைய கணவரை அவரின் குடும்பத்தினர்தான் ஆணவக்கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எரித்துவிட்டனர். என் கணவரை ஆணவக்கொலை செய்த அவரின் குடும்பத்தினர் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று  ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!