திருவாரூரில் வாயில் மனித கழிவுகளை திணித்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் என்பரை மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவாரூரில் வாயில் மனித கழிவுகளை திணித்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் என்பரை மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லிமலை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான இவருக்கும்- ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமாருக்கும், கோவில் திருவிழாவின் போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி, கொல்லிமலையை அவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, மலம் உண்ண திணித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய காவல்துறையினர் சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தப் புகாரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கேட்டிருந்தது. இந்நிலையில் சக்திவேல் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.