திருப்பூர் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்ததற்காக அபராதம் விதித்த காவல் துறையினரை இளம் பெண் அவருக்கு தெரிந்த சட்ட விதிகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என துவக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகளை தவிர்த்து பிற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை பின்பற்றாமல் உள்ளே வரும் வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில் நேற்று மாலை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கணவன், மனைவி, குழந்தை என 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த விஜயன் என்பவர் தனது செல்போனில் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளான் என ஏக வசனத்தில் பேசத் தொடங்கியுள்ளார். இதனை கேட்ட காவல் துறையினர் தம்பி ரசீது கொடுத்துள்ளோம் சென்று அபராதம் கட்டிக் கொள் என தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் வைரலாவதற்காக நடுரோட்டில் குளித்த இளைஞர்; 3,500 அபராதம் விதித்து வைரலாக்கிய காவல்துறை
ஆனால் அதனை ஏற்காமல் 1000 ரூபாய் அபராதம் எப்படி விதிக்கலாம் என கணவருக்கு ஆதரவாக அவரது மனைவி ஏக வசனத்தில் பேச துவங்கி உள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் வீடியோ எடுக்க துவங்கியதும் பிரச்சினையை முழுவதுமாக மாற்றி ஏன் ரூடா பேசுறீங்க? அடிப்பீங்களா என கேட்டு காவல் துறையினரை அலறவிட்டார். நடக்காத சம்பவங்களை கோர்வையாக பெண் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அபராதம் தானே விதித்தோம் என கேட்பதும் 1000 பைன் போட்டான் என ஏன் பேசினீர்கள் என கேட்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
செங்கோலை வைத்து அரசியலா? இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் - தமிழிசை காட்டம்
மேலும் குழந்தை முன்னாள் சீருடையில் வந்து அபராதம் கேட்பதா, அதற்கு ரூல்ஸ் கிடையாது என விடாது பேசிய பெண்ணை சமாளிக்க முடியாத காவல் துறையினர் பெண் காவல் துறையினரை வரவழைக்க முயன்றனர். அதற்குள் உஷாரான பெண்ணின் கணவர் கட்சியினரின் உதவியுடன் அங்கிருந்து தனது மனைவி, குழந்தையுடன் வெளியேறினார். கணவரிடம் பேசுவது போல அதிகார தோரணையில் காவல் துறையினரை திட்டிய பெண் அதிகாரமாக அங்கிருந்து புறப்பட்டார். காவல் துறையினர் மேற்கொண்டு ஏதும் செய்ய முடியாமல் விரக்தியில் வேடிக்கை பார்த்தனர்.