Watch : ராணுவத்தில் பணியாற்றுவதாகக்கூறி பெண்ணிடம் உல்லாசம்! நவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த பெண்!

Published : May 15, 2023, 05:22 PM IST
Watch : ராணுவத்தில் பணியாற்றுவதாகக்கூறி பெண்ணிடம் உல்லாசம்! நவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த பெண்!

சுருக்கம்

ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  

திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு மூர்த்தி என்பவரிடம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், உறவினர் வெங்கடேசன் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் பழகி வந்து அவ்வப்போது உல்லாசமாகவும் இருந்ததாக தெரிகிறது. இதனால் கருதரித்த தனலட்சுமி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால், வெங்கடேசன் அவரது பெண் தோழியுடன் சேர்த்து தனது கருவை கலைக்க ஜூஸ் உடன் கருக்கலைப்பு மாத்திரை கலந்து கொடுத்ததால் தன் கரு கலைந்து விட்டதாக தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனலட்சுமி தெரிவிக்கிறார். தெரிவித்துள்ளார் . மேலும், தன் மகன் ராணுவத்தில் இருப்பதால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என் மகனுடன் பழகுவதை நிறுத்திக் கொள் என வெங்கடேஷின் பெற்றோரும் மிரட்டி வருவதாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த போட்டோ, வீடியோக்களை வைத்து தன்னை வெங்கடேஷ் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துளாளர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெங்கடேஷ் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனலட்சுமி புகார் மனு அளித்துள்ளார். அதில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!