MDMK : உண்மையான மதிமுக தொண்டர்கள் என் பக்கம்! மதிமுக அவைத் தலைவர் துரைசாமி பேட்டி!

By Dinesh TG  |  First Published May 3, 2023, 6:48 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவில் தூண்டுதலின் பெயரிலேயே தன்னை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும், மதிமுகவில் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக மதிமுக அவை தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனது இல்லத்தில் மதிமுக அவை தலைவர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம் வைகோவின் துடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்ததாகவும், ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்து ஆகும் நிலை சென்றது வேதனை அளிப்பதாகவும், இதனை காப்பாற்றவே திமுகவை இணைக்க வலியுறுத்தினேன் என்றார். தனது கடிதம் புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார் கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது. அவை யாவும் தனது தனிப்பட்ட பெயரில் இல்லை தொழிற்சங்க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில் உள்ளது. அவை அனைத்தும் மதிமுக துவங்கப்படுவதற்கு முன்னதாகவே வாங்கப்பட்டது . ஆனால் மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கட்சியின் பொருளாளர் எந்த ஒரு காசோலைகளும் கையெழுத்திடவில்லை, வைகோவே கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறார். தன்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எந்த ஒரு தொண்டனும் உளவுபூர்வமாக எண்ணுவதில்லை. வைகோவின் தூண்டுதலின் காரணமாகவே தன்னை நீக்க வேண்டும் என கடிதமும் தீர்மானமும் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு காலமாக கட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே கடிதம் எழுதி திமுகவில் இணைக்க வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். தான் அரசியல் வாழ்வில் இருந்து விலகி அண்ணா பெரியார் பாதையில் பயணிக்க இருக்கிறேன். தன்னை கட்சியிலிருந்து நீக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ வைகோ ஏதோ பயம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.



தனது எந்த தொழில்களையும் வெற்றி பெறாத துரை வைகோ சினிமா படம் எடுத்து கட்சியை வளர்க்க நினைத்தார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்ததாகவும் அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் துரை சாமி தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

click me!