விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூரில் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக பல்வேறு இந்து அமைப்புகளால் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல வண்ணங்களில் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
undefined
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் புதூரில் திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் கடந்த 13 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான சிலைகளை விற்பனைக்காக தந்தையும் மகனும் இணைந்து தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த விநாயகர் சிலைகளானது மூன்றரை அடி உயரம் முதல் 16 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மாப்பிள்ளை விநாயகர், ரத விநாயகர், யானை பல்லாக்கு விநாயகர், மத்தள விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர், லிங்க அபிஷேக விநாயகர், கிருஷ்ண விநாயகர், டிராகன் விநாயகர், சிங்கம், புலி, கரடி, பாம்பு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர்.
பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை; கர்ப்பத்தால் பிடிபட்ட முதியவர்
பல வண்ணங்களில் அரசு விதிமுறைகளின் படி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் வாட்டர் கலர், காகித கூல், கிழங்கு மாவு, சவுக்கு குச்சிகளைக் கொண்டு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன பவுடரை தவிர்த்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சிலைகள் 15 முதல் 20 நிமிடங்களில் தண்ணீரில் முற்றிலும் கரைந்து விடும் தன்மை கொண்டவை. மேலும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் இருந்து சிலை பாகங்கள் பெருமளவு கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை இணைத்து பின்னர் பல வண்ணங்களை பூசுவதாகவும் தற்போது பாண்டிச்சேரியில் இருந்து சிலை பாகங்கள் குறைந்த அளவே வந்திருப்பதாகவும் ஆர்டர்கள் நிறைய இருந்தும் தங்களால் சிலைகளை அதிக அளவு உற்பத்தி செய்ய முடியாத நிலை இந்த வருடம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மோடி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் - சீமான் ஆவேசம்
பல்லடம் பகுதியில் உற்பத்தியாகும் விநாயகர் சிலைகள் அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பெயரில் விற்பனை செய்வதாகவும் சிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாகவும், மூன்றரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை நான்காயிரம் முதல் 16 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 34 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் சிலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.