திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலமுருகன் என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதே கல்லூரியில் தமிழ் துறையில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் பயின்று வரும் மாணவி ஒருவரை பேராசிரியர் பாலமுருகன் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி women helpline 181 எந்த என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மாணவி அளித்த தகவலின் படி பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மீது புகார் அளித்தனர்.
undefined
திண்டுக்கல்லில் தாயுடன் நடந்து சென்ற பெண் கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் வெறிச்செயல்
பெண்கள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தமிழ் பேராசிரியர் பாலமுருகனை தேடி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்து ஒரு வார காலம் ஆகியும் பேராசிரியரை கைது செய்யாதது ஏன் எனவும்? உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியின் நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறும் தலைமறைவாக உள்ள பேராசிரியரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 28 பேர் காயம்
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது இந்த புகார் சம்பந்தமாக தனி குழு அமைத்து மற்ற மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் அவரிடம் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனபோக்கோடு செயல்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வழக்கு போடுவோம் என காவல்துறை மிரட்டுவதாகவும் உடனடியாக பேராசிரியரை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.