விவசாய நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக விவசாயிகள் மொட்டை அடித்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் 1963ம் ஆண்டு சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டு உழவர்கள், வீடு மனை உரிமையாளர்களின் உரிமை ஆக்கப்பட்ட இடம், நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையும், வக்பு வாரியமும் தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சில பகுதிகளில் விவசாயம் செய்து வரும் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
undefined
இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இனாம் விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் உடமைகளுடன் தொடர்பு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்து கொலை; மனைவி, மகன் வெறிச்செயல்
தமிழக அரசு இதனை கண்டு கொள்ளாவிடில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஒரு பகுதியாக ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் குமரன் நினைவகத்தின் நிழலில் நின்ற விவசாயிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்தபோது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.