தாராபுரத்தில் தங்கதேர் வழிபாட்டுக்கு அனுமதி கோரி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு

By Velmurugan s  |  First Published Aug 15, 2023, 3:33 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மதுரை வீரன் தங்கத்தேர் வழிபாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழக்கும் படி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சூரியநல்லூர், கவுண்டச்சிபுதூர், பரஞ்சேர் வழி, பால சமுத்திரம் புத்தூர், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்,

கிராம மக்களின் மனுவில் கூறியுள்ளதாவது, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டத்திற்கும் உட்பட்ட 32 ஊராட்சிகளில் ஊர் மக்களின் குலதெய்வமாக மதுரை வீரன் சுவாமி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் மதுரை வீரன் சுவாமியின் தங்கத்தேர் வழிபாடு 32 பஞ்சாயத்துகளில் நடைபெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

திருப்பூரில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிய பல ஆண்டுகளாக மிரட்டி வன்கொடுமை செய்த இருவர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குறிப்பாக சூரியநல்லூர், ருத்ராவதி, கவுண்டச்சிபுதூர், பரஞ்சேர் வழி முதியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வைத்து பூஜை செய்து வழிபட உள்ள நிலையில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கத்துடனும், சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் உண்மைக்கு புறம்பாக தகவலை கொடுத்து வருகின்றனர்.

வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி; காவல்துறை அதிரடி

இது போன்ற பொய்யான மனுவை நீங்கள் நிராகரிக்க வேண்டும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் எங்களது ஊரில் மதுரை வீரன் தங்கத்தேர் வழிபாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழக்கும் படி 300க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

click me!