திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வட மாநில தொழிலாளர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக திருப்ப்பூரைச் சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகை தரும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதன் காரணமாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் அவர்களையே வேலைக்கு சேர்க்கின்றனர்.
இதனால் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பின்னலாடை நிறுவனத்தில் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். ஆனால் தாங்கள் மாத வாடகை மற்ற செலவுகள் என அதற்கு தேவையான சம்பளம் கேட்பதால் தங்களை நிராகரித்து வடமாநித் தொழிலாளர்களை பணியமறுத்துகின்றனர்.
காவலர்கள் கண்முன்னே விஷமருந்தி விவசாயி பலி; கை கட்டி வேடிக்கை பார்த்த ஆய்வாளர்
எனவே திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மீட்கப்படும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; இனி குடிநீர் கேன் எடுத்துவர தடை