நெல்லையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 11, 2023, 10:26 AM IST

நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம், தென்காசி  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே மினி பேருந்து மோதி இளம் பெண் பலியாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் டாஸ்மாக்  மது பான கடை உள்ளதால் எப்பொழுதும் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகள் சலோ ரம்யா. இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

Tap to resize

Latest Videos

தற்போது அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள பாலத்தில் வேலை நடைபெற்று வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக போக்குவரத்து முற்றிலும் மாற்றி விடப்பட்டுள்ளது. எனவே தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்போது சாலையில் சென்ற மினி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சலோ ரம்யா இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், சலோ ரம்யா மீது மினி பேருந்து ஏறி, இறங்கியது.

கோவையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பெண் விபத்தில் சிக்கும் நெஞ்சை பதற வைக்கும் காணொலி காட்சி வெளியாகி உள்ளது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் போட்டி... சிறுவர் சிறுமியர்களுடன் கண்டு ரசித்த உதயநிதி!

மேலும் இந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பீடு பிரேக்கர் மற்றும் தடுப்பு டிவைடர் வைத்து பொது மக்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் பாதுகாப்பாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மினி பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!