தமிழக அரசு நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கப்படுவதால் போக்குவரத்துத்துறைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து அண்மையில் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அடுத்த வாடியூர் பகுதியில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டாார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தென்காசி முதல் வாடியூர் வரை கடந்த 40 வருடங்களாக இயக்கப்பட்டு வந்த 13ம் எண் பேருந்தின் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 13ம் எண் பேருந்து என்பது தென்காசி மாவட்டத்திற்கே ஒரு அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
தற்போது 13ம் எண் பேருந்து இயக்கப்படாத காரணத்தால் கடந்த கல்வியாண்டில் பராசக்தி கல்லூரிக்கு செல்ல முடியாத காரணத்தால் 12 மாணவிகள் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் பீடி சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் 13ம் எண் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வறுமை காரணமாக பழனியில் ரயில்முன் பாய்ந்து திமுக பிரமுகர் தற்கொலை
இதற்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பதில் அளிக்கையில், அரசு நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படுவதால் போக்குவரத்துத்துறை தொடர்ந்து நட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருசில கிராமங்களுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நீங்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பழனி பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை
மகளிருக்கான இலவச பேருந்து சேவையால் போக்குவரத்துத்துறை நட்டத்தில் இயங்குவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.