Watch : பல் புடுங்கிய அம்பை ஏ.எஸ்.பி பல்பீர் சிங் விவகாரம்! சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்!

By Dinesh TG  |  First Published Apr 22, 2023, 1:42 PM IST

அம்பாசமுத்திரம் பகுதியில், விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினர்.
 


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து வழக்கு கோப்புகளை பெற்றுக்கொண்ட அவர், தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.



தற்போது சிபிசிஐடி டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடையவியல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சீனியம்மாள் தலைமையிலான தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். மேலும் போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்

Tap to resize

Latest Videos

Crime News: சென்னையில் பயங்கரம்!காக்கா தோப்பு பாலாஜியின் முக்கிய கூட்டாளி பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை.!
 

click me!