காவல் அதிகாரி பல்வீர்சிங் விவகாரம்; இடைக்கால அறிக்கையை தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By Velmurugan s  |  First Published Apr 19, 2023, 8:14 PM IST

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர்சிங்குக்கு எதிரான உயர்மட்ட குழு விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட பலரும் மிரட்டப்பட்டு பிரல் சாட்டியமாக மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய தொடர் விசாரணையைத் தொடர்ந்து வழக்கு குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி அமுதா தாக்கல் செய்தார். மேலும் இடைக்கால அறிக்கையில், இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

Latest Videos

undefined

போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

உயர்மட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் அலுவலர்கள் சிலர் மீது தாக்குதல் நத்தியதாகக் கூறிய புகார், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கு தற்போது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையில் உள்ளது.

கிருஷ்ணகிரியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

மேலும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இடைக்கால அறிக்கையில், இந்த விசாரணை இனி குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு தொடர்புடைய அனைத்து குற்ற வழக்குகளும் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (CBCID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!