பல் புடுங்கிய சர்ச்சை: நாளை தொடங்கும் விசாரணை.. புகார் கொடுக்க வாங்க - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By Raghupati R  |  First Published Apr 9, 2023, 10:23 PM IST

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார்.


நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி போலீசார் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சம்பந்தப்பட்ட போலீசார் சிலர் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், "நெல்லையில் விசாரணை கைதிகளின் பல்லை புடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியும் அரசின் முதன்மைச் செயலாளருமான அமுதா நாளை காலை 10 மணி முதல் 4: 00 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது விசாரணையை தொடங்க உள்ளார். 

பற்கள் பிடிங்கியது சம்மதமாக புகார்கள் அளிக்க விரும்புபவர்கள் ஆவணங்கள், தகவல்கள், அல்லது வாக்குமூலங்கள் அளிக்க விரும்புவோர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கலாம். 

இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?

ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் வாக்குமூலம் அளிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினால் அவர்களும் நேரில் வரலாம். பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்திக்கலாம். அல்லது மின்னஞ்சல் ambai. inquiry@gmail. com மூலமாகவோ தொலைபேசி whatsapp 918248887233 எண்ணிலோ புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!

click me!