கைதிகளின் பற்களை உடைத்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் - முன்னாள் அமைச்சர் கோரிக்கை

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 3:49 PM IST

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை உடைத்த ஏஎஸ்பி மீது கொலை முயற்சி வழக்கு  பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான தனுஷ்கோடி ஆதித்தன் இன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது ராகுல் காந்தியின் பதவி பறிப்பு என்பது ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது.

இந்த சம்பவத்தில் வேண்டுமென்றே அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வருகின்ற 15ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் வருகிற 20ம் தேதி மானூர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

திருவாரூர் மத்திய பல்கலை. மாணவிகள் மீது மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல்

தொடர்ந்து அவர் கூறுகையில் அம்பாசமுத்திரம் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அங்குள்ள முன்னாள் உதவி காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காவல் நிலையத்தில் அழைத்து துடிதுடிக்க அவர்களது பற்களை புடுங்கி கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பல் வீர் சிங் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல்வீர் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். 

சொகுசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி

இந்த விவகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த விவகாரத்தில் மிகச் சிறப்பாக விசாரணை நடத்தி நல்ல தீர்வு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

click me!