தென்காசியில் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை

By Velmurugan s  |  First Published Mar 30, 2023, 2:45 PM IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த ஊர்மேலழகியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 22). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் கடைக்கு அழைத்துச் சென்று மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை மாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அழுது கொண்டே தெருவில் நடந்து சென்ற சிறுமியை அக்கம் பக்கத்தினர் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடத்த விவரத்தை அவர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tap to resize

Latest Videos

தஞ்சையில் மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி கைது

இந்நிலையில், பொதுமக்கள் தன்னை தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினரிடம் மாணிக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாணிக்கம் அங்கிருந்து தப்பி விடவே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

லாரியில் சிக்கி 1 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட கேபிள் டிவி ஊழியர் உடல் சிதைந்து பலி

போராட்டக்காரர்களை சமாதானப்படுத்திய காவல் துறையினர் உடனடியாக மாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!