ஏப்ரல் 5ம் தேதி தென் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - பொதுத்தேர்வு?

By Velmurugan sFirst Published Mar 25, 2023, 12:30 PM IST
Highlights

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினத்தில் திட்டமிடப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் தினமானது திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தினமாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரமானது வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் நாளில் தென் மாவட்ட மக்கள் தங்கள் குல தெய்வ கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

அதன்படி பங்குனி உத்திரம் தினத்தில் குல தெய்வ கோவில்களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று ஆடு, கோழி பலியிட்டு படையலிடுவது, மாவிளக்கு பூஜை சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு அந்த நாளை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி; வனத்துறையினர் விரட்யபோது நேர்ந்த சோகம்

மேலும் அன்றைய தினத்தில் பொதுத் தேர்வுகள், அரசுத் தேர்வுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 6ம் தேதி முதல் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!