தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் இரண்டு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் அருகே உள்ள கிராமப்புறங்களில் இருந்து பயின்று வருகின்றனர். இப்படி அருகே உள்ள கிராமப்புறங்களில் இருந்து ஆலங்குளத்திற்கு வருகை தரும் கல்லூரி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட சில பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக இரண்டு தனியார் மினி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறு தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றுவது தொடர்பாக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டு மினி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா தமன்னா கைது
வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மாறி, மாறி பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கி கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதனை அங்கு இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
மேலும், பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பேருந்து நிலையத்தில் வைத்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும் மோதிக் கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.