காவல் அதிகாரி மீது தாக்குதல்; ராணுவ வீரர் உள்பட 4 பேரை தரதரவென இழுத்துச்சென்ற காவலர்கள்

By Velmurugan s  |  First Published Mar 29, 2023, 10:07 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காவல் அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர் உள்பட 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் இவர் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்த முத்துப்பாண்டியன்  பனவடலிச்சத்திரத்தில் உள்ள பக்கிரி மைதீன் என்பவரின் உணவகத்திற்கு முத்துப்பாண்டியன், அவரது சகோதரர் காசிப்பாண்டியன் மற்றும் உறவினர்கள் ஜோதிராஜ் ராமச்சந்திரன்  ஆகியோர்  சாப்பிட சென்றுள்ளனர்.

குடிபோதையில் வந்தவர்கள் உணவக உரிமையாளர் பக்கிரி மைதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டடுள்ளனர். இதனையடுத்து பணவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெறவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனவடலிசத்திரம் காவல் துறையினர் பிரச்சினையில் ஈடுபட்ட ராணுவ வீரர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

அரசு விழாவில் தண்ணீர் கூட வழங்காமல் அழைக்களிக்கப்பு; மாற்று திறனாளிகள் வேதனை

இந்நிலையில் விசாரணையின் இடையே ராணுவ வீரர் முத்துப்பாண்டிக்கும் காவலர் வள்ளிமணவாளன் என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உணவக உரிமையாளர் பக்கிரி மைதீன் மற்றும் காவலர் வள்ளி மணவாளன் கொடுத்த புகாரினையடுத்து ராணுவ வீரர் முத்துப்பாண்டியன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

தற்போது காவலரும், ராணுவ வீரர் முத்து பாண்டியனும் கைகலப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. மேலும் ராஜ போதையில் இருக்கும் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு ஆட்டோவில் ஏற்றி செல்லும் போது போதையில் உளறிய காட்சிகளும் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!