நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பை கண்டு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். நேற்று மதியம் அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டிருந்த போது அதிகாரி ஒருவரின் காலுக்கு அடியில் ஏதோ ஒன்று ஊருக்கு செல்வது போல் இருந்ததைக் கண்ட அவர் பாம்பு என சுதாரித்துக் கொண்டு கூச்சலிட தொடங்கினார்.
இதையும் படிங்க;- ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு... தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பதறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், பாம்பு இருக்கும் இடம் கண்டறியப்பட முடியவில்லை.
இதனை தொடர்ந்து அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள முள்புதர்கள் உள்ளிட்டவைகளிலும் தேடிப் பார்த்தும் பாம்பு சிக்காததால் அலுவலகத்திற்குள் செல்ல அச்சமடைந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலக அறையின் வாசலிலேயே நின்ற சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!