நெல்லை பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்த இளைஞரை அரிவாள் வெட்டியதுடன் அதை தடுக்க வந்தவரையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்த இளைஞரை அரிவாள் வெட்டியதுடன் அதை தடுக்க வந்தவரையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ். 27 வயதான இவர் இன்று பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அதே செட்டிகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித், பிரபாகரன், லிங்கேஷ், ராஜா ஆகிய நான்கு பேர் மாரி ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்… கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல்!!
undefined
அங்கிருந்த மாயாண்டி என்பவர் தடுக்க முயன்ற போது அவரையும் கிருஷ்ணகுமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வெட்டுப்பட்ட இருவரும் ஆத்திரத்தில் தரையில் கிடந்த கல்லை எடுத்து கிருஷ்ணகுமார் மீது எறிந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்து அங்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அரிவால் வெட்டுப்பட்ட மாரிராஜ் மாயாண்டி மற்றும் கல் எறிபட்டு காயமடைந்த கிருஷ்ணகுமார் ஆகிய மூன்று பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: மணப்பாறை அருகே கார்கள் மோதிக்கொண்டு கோர விபத்து... பெண்கள் உட்பட 4 பேர் பலி!!
மேலும் தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில், செட்டிகுளத்தைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கும் செல்வராஜ் என்பவருக்கும் இடையே இருந்து வரும் முன்பகை காரணமாக செல்வராஜ் தரப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று ராஜ் தரப்பை சேர்ந்த மாரிராஜை வெட்டியது தெரிய வந்துள்ளது. மேலும் கிருஷ்ணகுமார் மீது தாலுகா காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.