நெல்லையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கடப்பாரையால் தந்தை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கடப்பாரையால் தந்தை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த சேதுராயன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளார். இவரது மகன் மகாராஜனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சரிவர அவர் வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்திற்கு தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? நீதிபதிகள் காட்டம்!!
அதன் பின்ன அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போல் மது குடித்துவிட்டு தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கடப்பாறையில் மகராஜனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆறுமுகம் மானூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் Vs எடப்பாடி.. 2 பேருமே கிடையாது.! முத்துராமலிங்க தேவர் தங்க கவச வழக்கில் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
பின்னர் ஆறுமுகத்தின் தகவலின் அடிப்படையில் மாணவர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதமர் சோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான மகராஜன் மானூர் காவல் நிலையத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.