பாறையில் விசைப்படகு மோதி கடலில் மூழ்கியது; மீனவர்கள் மீட்பு; ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின!!

By Dhanalakshmi G  |  First Published Oct 26, 2022, 4:02 PM IST

நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் பாறையில் மோதிய விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனை அடுத்து படகில் இருந்த 11 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள், வலைகள் கடலில் மூழ்கின.


தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கு சொந்தமாக ரூ. 80 லட்சம் மதிப்பிலான இழுவை வலை விசைப்படகு உள்ளது. இந்தப் படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1ஆம் தேதி தருவையைச் சேர்ந்த வினி என்ற மீனவர் தலைமையில் ஆழ் கடலுக்கு  சுமார் 11 மீனவர்களுடன்  சென்றுள்ளனர். நேற்று மீன் பிடித்து விட்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில், கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கடலில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. இதில் விசைப்படகின் அடிப்பகுதி சேதமடைந்தது. என்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் விசைப்படகில் இருந்த மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  

Tap to resize

Latest Videos

undefined

Watch : நெல்லையில் திருடனை துரத்தி சென்ற பொதுமக்கள்! - பரபரப்பு சிசிடிவி காட்சி!

இடிந்தகரை மீனவர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள், விசைப்படகில் இருந்த 11 மீனவர்களை மீட்டனர். அதற்குள் விசைப்படகு 95 சதவீதம் கடலுக்குள் மூழ்கியது. அதில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின. இதே போல் அவர்களுக்கு சொந்தமான ஏராளமான வலைகளும் கடலில் மூழ்கியது. தற்போது 95 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள விசைப்படகை மீட்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து இழுவை விசைப்படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மூழ்கிய விசைப்படகை மீட்க தேவையான நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எதற்காக நெல்லையில் கூடுதலாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பு; மக்கள் கொந்தளிப்பு!!

click me!