எதற்காக நெல்லையில் கூடுதலாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பு; மக்கள் கொந்தளிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published Oct 26, 2022, 3:37 PM IST

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் பத்து மடங்கு கூடுதலாக அபராதம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த  நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறுவோர் மீது புதிய சட்டத்தின் அடிப்படையில் அபராத தொகை வசூலித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், அபராதம் வசூலிக்கும் கையடக்க கருவியில் உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

கோவை கார் வெடிப்பு விபத்து சம்பவம்..! தேசிய புலனாய்வுக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே மாநகர போக்குவரத்து போலீசார், இன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வது, அதிக வேகத்தில் செல்பவர்கள் உள்பட சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து புதிய சட்டத்தின்படி 10 மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் 100 ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் ரூபாயும், ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதிலாக, ஐந்தாயிரம் ரூபாயும், அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இரண்டாவது முறையாக சிக்கும் நபர்களிடம் 15 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாயும், அதிவேகமாக ஓட்டும் கனரக வாகன ஓட்டிகளிடம் நான்காயிரம் ரூபாய் என பத்து மடங்கு உயர்த்தப்பட்ட புதிய அபாரத தொகை வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மக்களே அலர்ட் !! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்குகிறது.. வானிலை மையம் தகவல்

ஏற்கனவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட அதிக செலவினத்தை தாக்கு பிடிக்க முடியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பண்டிகை முடிந்த கையோடு திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாலை வித்துக்களை தடுக்க இதுபோன்ற விதிமுறைகளை கடுமையாக்குவது தவறில்லைதான். அதேசமயம், அதற்கேற்ப சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இது போன்று பத்து மடங்கு அபராதத் தொகை வசூலிப்பது எப்படி நியாயம் என்று புலம்பியபடி வாகன ஓட்டிகள் சென்றனர்

click me!