10 அடி நீள மலைப்பாம்பிடம் உயிருக்கு போராடி சண்டையிட்ட மயில்..! பார்த்தவர்களை பதறவைத்த காட்சி..!

By Manikandan S R S  |  First Published Nov 2, 2019, 12:18 PM IST

அங்கே 10 அடி நீளத்தில் பெரிய மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்திருக்கிறது. அதன் அருகே மயில் ஒன்று சுருண்டு கிடந்தது. மலைப்பாம்பு தனது உடலால் மயிலை சுற்றிவளைத்து விழுங்க முயற்சித்திருக்கிறது. ஆனால் மயிலும் விடாமல் மலைப்பாம்பை கொத்தி உயிருக்கு போராடி சண்டையிட்டு இருந்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவண பெருமாள். விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நிலங்கள் இருக்கிறது. நேற்று மாலை சரவண பெருமாள் தனது வயலுக்கு சென்று வேலைபார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது வயலின் ஒரு பகுதியில் விசித்திரமான சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் சரவணபெருமாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அங்கே 10 அடி நீளத்தில் பெரிய மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்திருக்கிறது. அதன் அருகே மயில் ஒன்று சுருண்டு கிடந்தது. மலைப்பாம்பு தனது உடலால் மயிலை சுற்றிவளைத்து விழுங்க முயற்சித்திருக்கிறது. ஆனால் மயிலும் விடாமல் மலைப்பாம்பை கொத்தி உயிருக்கு போராடி சண்டையிட்டு இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைத்த சரவண பெருமாள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். மலைப்பாம்பும் மயிலும் பின்னி பிணைந்து சண்டையிடுவதை பார்த்து அவர்கள் திகைத்து நின்றனர்.

பின்னர் அவர்கள் மலைப்பாம்பிடம் இருந்து போராடி மயிலை பத்திரமாக மீட்டுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். வனத்துறை காவலர்கள் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'நான் சுர்ஜித் பேசுகிறேன்'..! நெஞ்சை உருக்கும் வரிகளுடன் அரசு பள்ளியில் திறக்கப்பட்ட கல்வெட்டு..!

click me!