அக்டோபர் 21-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவித்த தமிழக அரசு...!

By vinoth kumar  |  First Published Oct 17, 2019, 5:25 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் சூறவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இருவரையும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!