குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 19, 2019, 5:40 PM IST

நெல்லையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


நெல்லையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவின்படி வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 24-ம் தேதி என மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!