அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jan 24, 2023, 10:07 AM IST

தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஹரன், மந்த்ரா தம்பதியினர். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய சூழலில், தற்போது, மந்த்ரா கருத்தறித்து பிரசவத்திற்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி மந்த்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை ஹரிஹரன் தென்காசி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். நீண்ட நேரமாக சுகப்பிரசவத்திற்கு மருத்துவர்கள் காத்திருந்த நிலையில், சுகப்பிரசவம் ஆகாததால் அறுவை சிகிச்சை மூலம் மந்திராவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

Latest Videos

undefined

திருச்சியில் சென்சார் கதவை உடைத்து 2.5 கிலோ தங்கத்தை திருடிய டிஜிட்டல் கொள்ளையர்கள்

இந்த நிலையில், குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. இதுகுறித்து, ஹரிஹரன் - மந்த்ரா தம்பதியினர் பலமுறை மருத்துவர்களிடம் கூறியும் அவர்கள், எந்த விதமான சிகிச்சையும் அளிக்காமல், குழந்தைக்கு எறும்பு கடித்திருக்கும், பசிக்கும் என கூறி குழந்தை அழுவதற்கான காரணம் குறித்து எந்த விதமான பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் 10 நாட்களுக்கு மேலாகியும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்த சூழலில், ஹரிஹரன் மறுபடியும் மருத்துவர்களிடம் கூறவே மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் குழந்தையின் இடது காலில் பிரசவத்தின் போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.! இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்- இபிஎஸ் அணியை அதிர்ச்சியாக்கும் ஓபிஎஸ்

அதனைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த ஹரிஹரன் - மந்த்ரா குடும்பத்தினர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, குழந்தைக்கு மாவுக்கட்டு போட்டு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்குறைவால் குழந்தையின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததால், தற்போது அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரேமலதா, பிரச்சினையில் ஈடுபட்டு வருவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

click me!