30க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்ற வெறிநாய்கள்; விவசாயிகள் வேதனை

By Velmurugan s  |  First Published Jun 14, 2023, 1:04 PM IST

சங்கரன்கோவிலில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தது. நாய் கடித்துக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செந்தட்டி கிராமத்தில் சரவணன்(வயது 38) என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்ககொட்டையில் 30க்கும் மேற்பட்ட செம்பரி ஆடு மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். ஆட்டுக்கொட்டைகைக்குள் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறியதில் 30 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

வெறி நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சங்கரன்கோவில்  மற்றும் அருகில் உள்ள கிராமப்புறங்களில் வெறி நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்பகுதி குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் அனைத்தும் கொட்டப்படும் பகுதியாக மாறி வருவதால் அந்த கழிவுகளை தேடி நாய்கள் கூட்டம்கூட்டமாக வருகிறது.  இந்த நாய்களால் ஆடு மாடுகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - நாராயணன் திருப்பதி கருத்து

எனவே வெறி நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்காத  அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. வெறி நாய் கடித்து முப்பதுக்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததால் 20 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். எனவே தமிழக அரசு உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயின் கோரிக்கையாகும்.

சிறுமியை கற்பழித்த சிறை வார்டன் போக்சோ சட்டத்தில் கைது

click me!