கோதையாறு அணை பகுதியில் உல்லாசமாக உலா வரும் அரிகொம்பன்

By Velmurugan s  |  First Published Jun 6, 2023, 10:03 PM IST

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கோதையாறு அருகே விடப்பட்ட அரிக்கொம்பன் யானை அணை பகுதியில் உலாவரும் வீடியோ வெளியாகி உள்ளது.


தேனி மாவட்டத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிபட்ட அரிகொம்பன் யானை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதி வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்துக்குழி எனும் பகுதியில் விடுவதற்காக நேற்றிரவு வனத்துறையினர் கொண்டு சென்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

தொடர்ந்து முத்துக்குழி என்ற பகுதிக்கு யானையை ஏற்றி செல்ல முடியாத காரணத்தினால் குட்டியாறு டேம் என்ற பகுதியில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அரிக்கொம்பனை விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து யானை சற்று மயங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த யானை அணையின் அருகே நிற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நாமக்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை 

மேலும் யானை விடப்பட்டுள்ள இடத்தில் வனத்துறை மருத்துவ குழுவினர் முகாமிட்டு யானையின் நடவடிக்கையை கண்காணித்தும், அதற்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரிக்கொம்பன் யானையை கொண்டு சென்ற வாகனம் மற்றும் அதற்கு பாதுகாப்பிற்கு சென்ற வாகனங்கள் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் யானையை இறக்கிவிட்டு மாஞ்சோலை வழியாக தற்போது மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்தன.

நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை

click me!