சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை - அதிகாரிகள் தகவல்

By Velmurugan s  |  First Published Jun 9, 2023, 1:04 PM IST

தமிழகத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் தற்போது சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் மதுரைக்கு வந்தே பாரத் ரயில்சேவையை வழங்க திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் பயணிகளின் வசதிக்காக சென்னை - மதுரை இடையேயான ரயில் சேவையை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

திண்டுக்கல்லில் பட்ட பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை; அச்சத்தில் உறைந்த மக்கள்

இந்நிலையில் சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது இயக்கப்பட்டு வரும் அதி விரைவு ரயில்களின் வேகத்திற்கே வந்தேபாரத் ரயிலும் இயக்கப்பட உள்ளதால் பாதையில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. பெட்டிகள் விரைவில் தயாரிக்கப்படும் பட்சத்தில் ரயில் சேவை உடனடியாக துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!

மேலும் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் தென் மாவட்டத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில் தான் அதிக வசூல் செய்துள்ளது என்பது கூடுதல் தகவல். இதே போன்று சென்னை, கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் குறைக்கப்பட்ட பெட்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!