தென்காசி மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான நபர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமான நபர்களுக்கு ப்ளூ காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ப்ளூ காய்ச்சல் வைரஸ் ஆனது கடந்த சில நாட்களாக தான் தென்காசி மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருவதாகவும், இது சாதாரண காய்ச்சல், சளி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறையில் மது அருந்திய தலைமை காவலர்; வீடியோ வைரலான நிலையில் சிறைத்துறை அதிரடி நடவடிக்கை
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.