சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக, திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை, மேலும் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரியின் கணவர் பினாமி பெயரில் நகராட்சி டெண்டர்களை எடுத்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றசாட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் கொலைவெறி தாக்குதல்; மன்ற கூட்டத்தில் நாற்காலிகள் பறந்ததால் பரபரப்பு
அதனால் இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் 13 கவுன்சிலர்கள், திமுக-வை சார்ந்த 10 கவுன்சிலர்கள் என மொத்தம் 23 கவுன்சிலர்கள் நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தனித்தனியாக நகராட்சி ஆணையாளர் சபாநாயகத்திடம் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் நகர்மன்ற தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது அதிமுக, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்த சம்பவம் சங்கரன்கோவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.