முதல்வரால் தொடங்கப்பட்ட வஉசி மைதானத்தில் ஊக்கமருந்து கண்டெடுப்பு; வீரர்கள் அதிர்ச்சி

By Dinesh TG  |  First Published Oct 10, 2022, 1:28 PM IST

நெல்லையில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மைதானத்தின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்துகள் கண்டெடுப்பு. மாவட்ட ஆட்சியர் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அன்று மூன்று விதமான ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி
 


திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தை திறந்து வைத்தார். இதில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தில் நேற்று முதல் போட்டியாக நடைபெற்ற எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

சேலம் அருகே அதிர்ச்சி.. குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. அலறியடித்து ஓடிய மக்கள்..

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இந்த மைதானத்தின் கழிவறைகளில் போதை மருந்து ஊசிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழிவறைகளில் ஊக்க மருந்து சிதறி கிடக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்திமின் ( astymin) விஐடி பி-12 மற்றும் அமினோ ஆசிட்( VIT B12 and Aminoacids) ரினர்வ் பிளஸ்( renerve plus) ஆகிய மூன்று ஊக்க மருந்துகளின் பயன்படுத்தப்பட்ட கவர்களும், ஊசிகளும் ஆங்காங்கே கிடக்கின்றன. 

தஞ்சை அருகே பரபரப்பு !! கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்த அரசு பேருந்து..

நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்கள் இதை பயன்படுத்தினார்களா அல்லது ஏற்கனவே வெளியூர்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சென்ற வீரர்கள் இந்த போதை ஊசிகளை பயன்படுத்தினார்களா என கேள்வி எழுந்துள்ளது. சட்டப்படி விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவது குற்றம் என்றபோது நெல்லை மாவட்டத்தில் அரசு மைதானத்தில் அதுவும் மாவட்ட ஆட்சியர் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அன்று ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

click me!