தென்காசியில் திமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் கணவர் தற்கொலை; காவல்துறை விசாரணை

Published : Aug 21, 2023, 03:08 PM IST
தென்காசியில் திமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் கணவர் தற்கொலை; காவல்துறை விசாரணை

சுருக்கம்

தென்காசி மாவட்டத்தில் திமுகவைச் சார்ந்த செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக பொறுப்பு வகிப்பவர் திமுகவைச் சார்ந்த திருமலைச் செல்வி. இவரது கணவர் மோகன்ராஜ் (வயது 40). கணவன், மனைவி இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த புலியரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன் ராஜின் உடலை நேற்று மாலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் டீ பிரேக் எடுத்த தொண்டர்கள்; சிற்றுண்டிக்கு படையெடுத்த உடன்பிறப்புகள்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊராட்சிமன்ற குழு தலைவரின் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்