நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை..

By vinoth kumar  |  First Published Aug 18, 2022, 2:15 PM IST

பிரபல இலக்கிய தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.


பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

நெல்லை கண்ணன் என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். திருநெல்வேலியில் 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிறந்தார். இவரது ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி. இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- நன்றி மறந்த காங்கிரஸ்... கண்ணீர் வடித்த நெல்லை கண்ணன்.. இனி தமிழகம் ஸ்டாலின் பின்னால் தான்..

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றிருந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சை கருத்தை பேசியதற்காக சிறை சென்றிருக்கிறார். 

இதையும் படிங்க;- திருமா மடியில் மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி அடைவேன்... நெகிழும் நெல்லை கண்ணன்..!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எப்போதும் சமூக வலைதளங்களிலும், குறிப்பாக முகநூலில் தொடர்ந்து பதிவுகள் எழுதிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஜூலை 4-ம் தேதிக்குப் பின் எந்த பதிவுகளும் எழுதவில்லை. சமீபத்தில் கூட தான் மருத்துவச் செலவுக்கு சிரமப்படுவதாகவும், வாய்ப்பிருப்பவர்கள் உதவுமாறும் தன் முகநூலில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  செத்துடலாம்னு நினைக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலினோடு பேச என்னை அனுமதிக்கமாட்றாங்க.. நொந்து போன நெல்லை கண்ணன்!

click me!