மருத்துவக்கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி.. உன்னுடைய சாவுக்கு நானே காரணமாயிட்டேனே.. கதறிய சக நண்பர்கள்.!

Published : Jul 25, 2022, 12:33 PM ISTUpdated : Jul 25, 2022, 12:37 PM IST
மருத்துவக்கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி.. உன்னுடைய சாவுக்கு நானே காரணமாயிட்டேனே.. கதறிய சக நண்பர்கள்.!

சுருக்கம்

நெல்லையில் நம்பி கோயில் மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையில் நம்பி கோயில் மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேரும், மாணவிகள் 6 பேரும் என 11 பேர் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு நேற்று காலை சென்றுள்ளனர். பின்பு, அவர்கள் நம்பி பெருமாள் கோயிலுக்கு மேலே வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தடாகத்திற்கு சென்றனர். 

இதையும் படிங்க;- டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட சாவுக்கு மாமியார்தான் காரணம்.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!

பின்பு அந்த தடாகத்தில் குளித்து கொண்டிருக்கும் போது கேரள மாநிலம் கொல்லத்தைத சேர்ந்த 22 வயதான ஜோயல் என்பவர் திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் ஜோயல் நீரில் மூழ்கியுள்ளார். இதுதொடர்பாக உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஜோயல் உடலை சடலமாக மீட்டனர்.

பின்னர் அவரது உடலை கம்பில் கட்டி சுமார் 2 கிலோ மிட்டர் தேதாளில்  சுமந்தபடி கொண்டு வந்தனர். இதனையடுத்து, ஜோயல் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் துடிதுடித்து பலி.. திருமணமான ஒரு மாதத்தில் சோகம்..!

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்