KTM-பைக்கில் வந்து ஆடு திருடும் கும்பல்.. அதிரடி வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

By vinoth kumar  |  First Published Mar 17, 2022, 1:03 PM IST

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நம்பி (61). விவசாயி. இவர் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப் போட்டு வளர்த்து வந்தார். தூங்கி எழுந்து காலை எழுந்து பார்த்தபோது ரூ 10,000 மதிப்புள்ள ஒரு ஆட்டை காணவில்லை. 


நெல்லையில் KTM பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆடு திருடும் காட்சிகள் அனைத்தும் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வீடுகள், நகைக்கடைகள் ஆகியவற்றை குறிவைத்து பெரியளவில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. எளிய மக்களின் உடைமைகளைக் குறிவைத்தும் நெல்லை மாவட்டத்தில் நூதன முறையில் கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் களவு போயிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ஆடு திருட்டு

இந்நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நம்பி (61). விவசாயி. இவர் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப் போட்டு வளர்த்து வந்தார். தூங்கி எழுந்து காலை எழுந்து பார்த்தபோது ரூ 10,000 மதிப்புள்ள ஒரு ஆட்டை காணவில்லை. 

KTM-பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமிகள்

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருநச்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது KTM பைக்கில் வந்து ஆடு திருடி சென்றது பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

click me!