கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் சினிமா தியேட்டரில் பிப்ரவரி 24ம் தேதி அஜீத் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது. அன்று அதிகாலை 4 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கான சிறப்பு காட்சி நடந்தது. அப்போது தியேட்டர் எதிரேயுள்ள ரோட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கோவையில் வலிமை படம் வெளியான தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் நெல்லையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் சினிமா தியேட்டரில் பிப்ரவரி 24ம் தேதி அஜீத் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது. அன்று அதிகாலை 4 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கான சிறப்பு காட்சி நடந்தது. அப்போது தியேட்டர் எதிரேயுள்ள ரோட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்த 2 பேர் தீ பற்றவைத்து அதை வாகனங்கள் நிறுத்தும் ரோட்டோர பார்க்கிங் முன் வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். இதில், நவீன்குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதையும் படிங்க;- கோவையில் பயங்கரம்.. வலிமை ரிலீஸான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
போலீசில் புகார்
இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, ரத்தினபுரியை சேர்ந்த லட்சுமணன் (22) என்பவரை சில நாட்களுக்கு முன் காட்டூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரசிகர்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றதில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் உயிரிழப்பு
இந்த வழக்கில் லட்சுமணனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த தவசி என்கிற அந்தோணி (27), சுரேஷ் (26), முருகன் (26) ஆகியோரை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் தவசி, சுரேஷ், முருகன் ஆகிய 3 பேரும் நெல்லை முன்னீர்பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில், தவசி (எ) அந்தோணி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சுரேஷ், முருகன் ஆகியோர்படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணமானதும் கைது செய்ய கோவை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- மக்களே உஷார்.. யூபிஎஸ் பேட்டரி வெடித்து விபத்து.. 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!