தென்காசியில் இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குத்துக்கல்வலசை சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. தர்பூசணி கடைகளில் செயற்க்கையான முறையில் பழங்கள் பழக்க வைக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் பரவி வந்தன.
undefined
இந்நிலையில் தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையின் ஓரமாக குத்துக்கல்வலசை பகுதியில் செயல்பட்டு வரும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று ஆய்வு நடத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 பேர் பலி; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
இந்த ஆய்வின் போது அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அந்த கடையில் இருந்த சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தார்.
மேலும், தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்பது வழக்கம். அதன்படி தண்ணீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை தேடி செல்லும் பொதுமக்கள் முதலில் வாங்குவது தர்பூசணி பழங்கள். அப்படி ஏராளமான பொதுமக்கள் விரும்பி உண்ணும் இந்த தர்பூசணி பழங்களிலே அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
50 ஆண்டு பழமையான மரத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
மேலும், இது போன்ற இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் அமிலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.