திருநெல்வேலி மாவட்டத்தில் பறை இசை கருவிகளுடன் ஏறியதால் பேருந்தில் இருந்து மாணவியை இறக்கி விட்ட நடத்துநரை இடைநீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. நெல்லையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து பறை இசைக்கருவிகளை பேருந்தில் எடுத்து வந்துள்ளார். ஆண்டுவிழா சிறப்பாக நிறைவடைந்த நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் பறை இசை கருவிகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் மாணவி இசை கருவிகளுடன் ஏறியுள்ளார். பேருந்து புறப்படத் தொடங்கிய நிலையில், இசை கருவிகளை பார்த்த நடத்துநர் பேருந்தில் இசை கருவிகளை எடுத்து வரக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் வாதிட்டு சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லையில் மினி பேருந்து ஏறியதில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் பேருந்து வண்ணாரபேட்டை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு மாணவி வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். திடீரென பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் மாணவி செய்வதறியாது திகைத்து நிற்வே அருகில் இருந்தவர்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் மாணவி ஊருக்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இருப்பினும் அவ்வழியாக வந்த எந்த பேருந்தும் மாணவியை ஏற்றிச் செல்ல முன்வரவில்லை.
இரண்டு மணி நேரம் தண்ணீரில் சிலம்பம் சுழற்றி சாதனை புரிந்த 11 வயது சிறுவன்
இறுதியாக நெல்லையில் இருந்து கோவை சென்ற அரசுப் பேருந்து நடத்துநர் மணவியின் நிலையை அறிந்து அவரை ஏற்றிச் செல்ல முன்வந்தார். இந்நிலையில், மாணவியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.