தேனி மாவட்டத்தில் அரிகொம்பன் யானை தாக்கி உயிரிழந்த தனியார் நிறுவன காவலாளியின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் கடந்த 27ம் தேதி புகுந்த அரிகொம்பன் காட்டு யானை தாக்கியதில் தனியார் நிறுவன காவலாளி பால்ராஜ் படுகாயம் அடைந்தார். தலை மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
undefined
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்ட பால்ராஜின் உடலுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட எண்ணெய் நிறுவனங்கள்; 4500 லி. எண்ணெய் பறிமுதல்
அதன்பின்னர் பால்ராஜின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ-5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பால்ராஜ் குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பால்ராஜின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
2 வயது குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை; கவனக்குறைவால் நேர்ந்த சோகம்
இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையே யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த தொகையும் பால்ராஜின் குடும்பத்திற்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.