தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்துள்ள அரிகொம்பன் யானை தொடர்ந்து பொதுமக்களை ஆவேசமாக துரத்தும் நிலையில் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்துள்ள அரிகொம்பன் யானை தொடர்ந்து பொதுமக்களை ஆவேசமாக துரத்தும் நிலையில் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் 10க்கும் மேற்பட்ட மனிதர்களை கொலை செய்த அரிகொம்பன் காட்டு யானையை அம்மாநில வனத்துறையுனர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிடித்தனர். அதன் பின்னர் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர்.
undefined
அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த அரிகொம்பன் நேற்று இரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்து கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த யானை அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஆவேசமாகத் துரத்தியது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் யானை சுற்றிவரும் பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதர்களைக் கண்டு அரிகொம்பன் யானை ஆவேசமடைவதால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறில் காதல் மனைவி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை - காவல்துறை விசாரணை
இது தொடர்பாக கோட்டாட்சியர் பால்பாண்டி வெளியிட்டுள்ள உத்தரவில், யானை அரிகொம்பனின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானை வரவழிக்கப்பட்டு கும்கியின் உதவியுடன் அரி கொம்பனை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் தலைக்கேறிய போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்; போக்குவரத்து பாதிப்பு