தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை 9 பேர் சேர்ந்து மாட்டு வண்டி அச்சாணியால் குத்திக் கொலை செய்த நிலையில் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அரண்மைனை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது தந்தை மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
காவல் துறையினரின் தீவிர விசாரணையில் சதீஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வசிக்கும் பகுதியிலேயே உள்ள ஒரு சில இளைஞர்களிடம் பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளில் பேசி அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அந்த முன்பகையின் காரணமாக 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தனக்காக பிறந்த நாள் கொண்டாடியவர்களுக்கு பாசத்துடன் நன்றி தெரிவித்த திருவானைக்காவல் யானை
மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பிரவீன, தீபக், புகழேந்தி, சிலை ராஜா மற்றும் சூர்யா ஆகிய இளைஞர்களை கைது செய்தனர். மேலும் கொலை குற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை 9 பேர் கொண்ட குழு அச்சாணியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு